சிரிப்பு.

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
ARUN KUMAR NEVER GIVE UP-NOW AVAILABLE IN MOBILES , ANDROID , TABS.

TOTAL PAGE VIEWERS

Translate

Monday, March 23, 2015

சைக்கிள்.


                                                             சைக்கிள்
                                                             
சைக்கிள் மிகச்சிறந்த , எளிமையான வாகனம் . சீனாவில் எல்லா நிறுவனங்களிலும் சைக்கிள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது . பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சைக்கிளை பயன்பாட்டிற்கு வழங்குகிறது .பெரிய நிறுவனங்களில் அதிகபட்சம் 2 ஆயிரம் சைக்கிள்களை நிறுத்தும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருக்கும் . உலகிலேயே சைக்கிளை அதிகமாக பயன்படுத்துவோர் சீனர்கள் தான் .

Friday, December 19, 2014

மரம் வளர்க்க உதவும் அணில்கள் !

உலகில் பல மில்லியன் மரங்களை அணில்கள் வளர்த்துள்ளன என்றால் நம்புவீர்களா ? நிஜம்தான் , கொட்டைகளை விரும்பி உண்ணும் அணில்கள் , ஏராளமான விதைகள் ,கொட்டைகளை சேகரித்து மண்ணில் புதைத்து வைக்கின்றன . சிக்கீரமே எங்கே அவற்றை [புதைத்தோம் என்பதை அணில்கள் மறந்து விடுவதால் அவை மரங்களாய் , செடிகளாய் வளர்ந்துவிடுகின்றன .இப்படி தன்னை அறியாமலேயே தாவர உலகை வாழ வைக்கின்றன அணில்கள். Friday, November 7, 2014

உடலில் சூடான பகுதி


மனித உடலிலேயே சூடான பகுதிகளில் ஒன்று மூளை .இங்குதான் பலவிதமான உயிர் வேதியியல் மாற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றது . தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு மூளை மிக விரைவாக குளிர்ந்துவிடுகிறது .அவர்களுக்கு மார்பு பகுதியே மிகவும் சூடான பகுதி என்கிறது ஆராய்ச்சி .

புனித கங்கை நதி .


புனித நதியான கங்கைக் கரையில் 29 பெரு நகரங்கள் , 70 சிறு நகரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன . 260 தொழிற்சாலைக் கழிவுகளும் , தினமும் 1.3 மில்லியன் லிட்டர் சாக்கடையும் கங்கையில் கலக்கின்றது.

CONTACT FORM.

Name

Email *

Message *

Fish