சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Monday, April 6, 2015

மாலை நட்சத்திரம்.

                  மாலை நட்சத்திரம்


                                       
                                   வீனஸ் எனப்படும் வெள்ளி ஒரு மாலை நட்சத்திரம் . சூரியன் மறைந்த ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகே வெள்ளி மறைகின்றது . வெப்பம் மிகுந்த அது பிரகாசமாக ஜோலிப்பதால் மாலை நட்சத்திரம் எனப்படுகிறது . இதற்கு அடுத்த நிலையில் மிகவும் ஒளி வீசியபடி விளங்குவது ஜுபிடர் எனப்படும் வியாழன் கோள் . 

Saturday, April 4, 2015

" சைனா பவுடர் " ஆபத்து .{தங்கத்தில் கலக்கப்படும் சைனா பவுடர்}.

                           " சைனா பவுடர் " ஆபத்து .
                         
                    தங்கத்தில் கலக்கப்படும் சைனா பவுடர் 

                       


                                               தங்க நகைகளில் செம்பிற்குப் பதிலாக தற்போது கலக்கப்படும் சைனா பவுடர் என்ற கலவையினால் பல நோய்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் இருப்பதாக வேதியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் .


                                                தங்க நகைகளில் இதுநாள் வரை செம்பு என்ற உலோகத்தை கலப்பார்கள் . இது உடலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்துவதில்லை . ஆனால் தற்போது சைனா பவுடர் ஒரு கலவை தங்கத்தில் சேர்க்கபடுகிறது .


                                                                                                                                 இரிடியம்

                                                     இந்த சைனா பவுடரில் இரிடியம் , ஸ்தேனியம் ஆகிய உலோகப் பொருட்கள் உள்ளன . இரிடியம் என்பது அரிய உலோகமாகும் .இது பிளாட்டினத்தின் இயல்புகளை கொண்டுள்ளது . ஆனால் பிளாட்டினத்தை விட விலை குறைவாக கிடைக்கிறது . இது பிளாட்டினத்தோடு சேர்ந்து கிடைக்கின்றது . இது மிக கடினமாக உள்ளது . வேதி வினைக்கு தடை அளிக்கின்றது . இது கதிரியக்கதன்மை உள்ளது .
                                                                                                                          ஸ்தேனியம்
                                               
                                                        ஸ்தேனியம் பவுடரிலும் கதிரியக்கதன்மை உள்ளது . இதனால் பல நோய்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் . சீனாவில் தயாரிக்கப்படும் இந்த பவுடர் இரகசியமாக கடத்திவரப்படுகின்றது . இதனை தங்க நகைகளில் சேர்க்கப்படும்போது உரைகல்லில் கண்டுபிடிக்க முடிவதில்லை . மேலும் கம்ப்யூட்டர் பருப்பாய்வு தொழில்நுட்ப முறையிலும் தங்கத்தில் சைனா பவுடர் கலக்கபட்டுள்ளதை கண்டறிய முடியாது . தங்க நகைகள் செய்யும்போது பரவலாக சைனா பவுடர் கலக்கபடுவதால் இதன் விலை அதிகரித்து கொண்டே செல்கின்றது . சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சைனா பவுடரின் விலை 500 மடங்கு உயர்ந்துள்ளது.


                                                        நகை உற்பத்தியாளர்கள் மத்தியில் பரவலாக இதன் உபயோகம் இருப்பதையே இந்த விலை உயர்வு காட்டுகின்றது . இந்த கலப்படம் கதிரியக்கத்தை கொண்டுள்ளதால் தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபாயத்தைக் கொண்டுள்ளது .


                                                         இந்த கலப்படத்தை சமாளிப்பது குறித்து மும்பையில் உயர்நிலை ஆய்வுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன . இந்திய அரசின் தரங்கள் துறை , மற்றும் ஹால் மார்க்கிங் துறை இந்த பிரச்னையில் அதிக கவனம் செலுத்துகின்றன . இந்தியாவில் தங்க நகைகள் வாங்கும் பழக்கமும் , சேமிக்கும் பழக்கமும் அதிகம் என்பதால் இந்திய இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது .


இந்த தகவல் தினமலர் செய்தித்தாளில் 3/AUGUST/2005 அன்று வெளியானது.