சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Monday, January 27, 2014

கேள்விக்குறி .[?].

                                                                  கேள்விக்குறி

                                       வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட்டும் , வரிகளுக்கு இடையே இடைவெளி விட்டும் , காற்புள்ளி , அரைப்புள்ளி , முக்காற் புள்ளி முதலியவற்றை இட்டு எழுதும் வழக்கத்தை முதலில் கையாண்டவர்கள் கிரேக்கர்கள் . இன்று நாம் பயன்படுத்தும் கேள்விக் குறியையும் , புள்ளி முறைகளையும் 1515-ஆம் ஆண்டில் இத்தாலியரான 'அல்ரூஸ் மனுஷயஸ்' என்பவர்தான் அமைத்து வைத்தார் . 

Friday, January 17, 2014

பென்குவின்.

                                                                   பென்குவின்

                        அண்டார்டிக்காவில் உறை நிலைக்கு கீழ் குளிர்ந்துள்ள நீரில் மனிதனால் 15 வினாடிகள் கூட உயிர்த்திருக்க முடியாது . ஆனால் அதே நீருக்குள் பென்குவின் பறவையால் 700 அடி ஆழத்தில் 20 நிமிடங்களுக்கு மூழ்கி இருந்து இரை தேட முடியும் .அவ்வளவு குளிரைத் தாங்கும் வகையில் இயற்கையில் அதன் தோல் அமைப்பில் கொழுப்பு பதிவுகளும் , ரோமங்களும் மிகுந்து காணப்படுவது ஆச்சரியம்தான் !    

Friday, January 10, 2014

உலக அதிசயங்கள்.


பொலிவியா நாட்டில் 'பூயாரெய்மண்டி' என்ற ஒரு வகை தாவரம் உள்ளது . இது வளர்ந்து 80-150 ஆண்டுகளுக்கு பின்பே பூப்பூக்க ஆரம்பமாகிறது .

Saturday, January 4, 2014

ஏன் இரவில் பனி பெய்கிறது !


                                  பூமியின் பரப்பில் நிகழும் உரைவித்தலால் பனி உருவாகிறது .சில சமயங்களில் இரவில் காற்றை விட பூமி அதிகமாக குளிர்ந்து விடுகிறது .காற்றில் உள்ள ஆவி , குளிர்ந்த தரைப் பரப்பில் உள்ள இலைகள் , தழைகள் , பொருட்கள் ஆகியவற்றில் மீது விடியற்காலையில் படியும் போது , அது உறைந்து பனித் திவலையாக மாறுகிறது . பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாக மாறி விடுகிறது .
                                   தரையில் இருந்து எழும் ஈர ஆவி , அதை விட குளிர்ந்த இலையில் படுமானால் , அது இறுகி வேறு வகை பனிப் படிவாக இருக்கும் .