சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, September 4, 2015

டீ பழக்கம்


                                      
                                                    டீ பழக்கம்
                            பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் டீ அருந்தி வருகிறார்கள்.  ஆனால் "தற்கால டீ பிரியர்கள், பழங்கால பாணியிலான டீயை விரும்புவதில்லை என்றும், கொட்டைகள், பழங்களின் கலவை மற்றும் மணங்கள் சேர்க்கப்பட்ட புதுப்புது ருசியுடன் டீ வகையை விரும்புகிறார்கள்" என்று அமெரிக்க எழுத்தாளர் பிரைய்ன் கீட்டிங், கூறி உள்ளார்.


                            மனிதர்கள் விரும்பும் மாற்றதிற்கேற்ற வித விதமான டீ தயாரிப்புகளின்,இங்கிலாந்தை வடக்கு அமெரிக்க பின்னுக்கு தள்ளிருப்பதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
                           

                              பழங்கால டீ தயாரிப்பு 3 சதவீதம் விழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தற்கால நவீன டீ தயாரிப்புகள் 7 சதவீதம் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் புள்ளிவிவரம் தருகிறார்.
                             

                               நீங்கள் நல்ல டீ சுவைக்க விரும்பினால், தயாரிக்க பட்ட 2 நிமிடத்தில் டீயை ருசிக்க வேண்டும் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Friday, July 24, 2015

கதர் .

                                     
                                                 கதர் 
"கதர்" என்ற சொல் அரபு மொழிச் சொல்லாகும் . இந்த சொல்லிற்கு "கவரவம்" என்று பொருள் .  ஒருவர் காந்திஜிக்கு கைத்தறி ஆடையை அணிவித்தார் .  அதை கதராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார் .  அன்று முதல் இந்த வகைதுணிகளுக்கு "கதர்" எம்று பெயர் வந்தது .  இன்றளவும் அந்த பெயரே வழங்கப்பட்டுவருகிறது .

                                                                      BY ARUNKUMAR NEVER GIVE UP.

மொபட் .

                                              மொபட் 
மோட்டார் மற்றும் பெடல் என்பதன் சுருக்கமே மொபெட் (MOPED) என்று குறிப்பிடப்படுகிறது .  எந்திர விசையை ஆங்கிலத்தில் மோட்டார் என்பார்கள் .  மிதிக்கும் விசையை பெடல் என்று குறிப்பிடுவார்கள் .  ஆரம்பக்காலத்தில் வெளிவந்த மோட்டார் வண்டிகளில் பேட;உம இணைக்கப்பட்டிருக்கும் .  நாடு வழியில் எரிபொருள் தீர்ந்து மோட்டார் இயங்காவிட்டால் , கால்களின் உதவியுடன் மிதித்து சேர வேண்டிய இடத்தை அடைய முடியும் .  எனவே மோட்டார் மற்றும் பெடல் ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட வண்டிகளுக்கு 'மொபெட்' என்று பெயர் வந்தது.
                                       
                                                      BY ARUNKUMAR NEVER GIVE UP. 

Friday, July 10, 2015

உலகின் மென்மையான விளக்கு .


இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் டியூப்லைட், குண்டு பல்பு போன்றவை புவியை சூடாக்கும் தன்மை கொண்டவை.  இவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தக் கூடியது.  தற்போது விஞ்ஞானிகள் முற்றிலும் புதுமையான, உலகின் மென்மையான விளக்கை உருவாக்கி இருகிறார்கள்.
                                       கொலம்பியா பல்கலைகழகம், சியோல் தேசிய பல்கலைக்கழகம், கொரியா அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த மெல்லிய விளக்கை உருவாக்கியுள்ளனர்.  மிக மெல்லியதும், வைரத்தை விட உறுதியானதுமான கிராபின் அணுக்களால் இந்த விளக்கு இழை தயாரிக்கப்பட்டு உள்ளது.  இது மிக அதிகமான வெப்பத்தை தங்குவதுடன் பிரகாசமாகவும் ஒளி தரக்கூடியது.
                                        வெளிச்சத்திற்கான விளக்காக மட்டும் அல்லாமல், கட்டிடத்தின் சுவர்களில் இந்த மெல்லிய விளக்குகளை பதித்து அழகுகூட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


                                                                                      BY 
                                                           ARUNKUMAR NEVER GIVE UP.    

Tuesday, May 19, 2015

சீட்டுக்கட்டு .

                          சீட்டுக்கட்டு 
                                    சீட்டுக்கட்டில் நான்கு ராஜாக்கள் இருப்பார்கள் . அது எந்தெந்த ராஜாக்கள் என்று தெரியுமா ?
                         
                                    " ஸ்பேடு " சீட்டில் உள்ள ராஜா கிங் டேவிட் , " கிளப்ஸ் " சீட்டில் உள்ள ராஜாவின் பெயர் அலெக்சாண்டர் தி கிரேட் , " ஹார்ட்ஸ் " சீட்டில் உள்ள ராஜாவின் பெயர் சார்லி மேக்னே , " டைமண்ட்ஸ் " சீட்டில் உள்ள ராஜாவின் பெயர் ஜூலியர் சீஸர் .
             

                                                                 BY
                                                                      ARUNKUMAR NEVER GIVE UP. 

Sunday, May 10, 2015

THE TRUE STORY OF CHE GUEVARA IN ENGLISH.

   THE TRUE STORY OF CHE GUEVARA IN                                    ENGLISH.             


                                      

சே குவேரா ஒரு புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு [தமிழ்].

             சே குவேரா ஒரு புரட்சி வீரனின்                   வாழ்க்கை வரலாறு [தமிழ்].



               பகுதி-1:-
                             

              பகுதி-2:-
                             

                      பகுதி-3:-
                             


                                                                                     BY
                                                                                        AK.
                                                                              

Saturday, May 2, 2015

வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு .[தமிழ்]

NETAJI SUBHASH CHANDRA BOSE REAL DOCUMENTARY VIDEO.[ENGLISH].

பென்சில்.

                                                        பென்சில் 



*பென்சிலால் நிருக்கடியிலும் எழுதலாம் .
*ஓர் அங்குல பென்சிலால் சுமார் 5 மைல் நீளத்துக்கு கோடு போடலாம் .
*ஆரம்ப காலத்தில் விண்வெளி வீரர்கள் எழுதுவதற்கு பயன்படுத்தியது பென்சிலை தான் .
*பென்சிலில் 40 வகையான பொருட்கள் கலந்துள்ளன .
*18 செ.மீ நிளமுள்ள பென்சிலால் 55 கீ.மீ நீளம் கோடு கிழிக்கலாம் .45 ஆயிரம் சொற்களை எழுதலாம் , 17 தடவை கூர்மையாக்கி பயன்படுத்தலாம் .

                                                             BY ARUNKUMAR NEVER GIVE UP

Monday, April 6, 2015

மாலை நட்சத்திரம்.

                  மாலை நட்சத்திரம்


                                       
                                   வீனஸ் எனப்படும் வெள்ளி ஒரு மாலை நட்சத்திரம் . சூரியன் மறைந்த ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகே வெள்ளி மறைகின்றது . வெப்பம் மிகுந்த அது பிரகாசமாக ஜோலிப்பதால் மாலை நட்சத்திரம் எனப்படுகிறது . இதற்கு அடுத்த நிலையில் மிகவும் ஒளி வீசியபடி விளங்குவது ஜுபிடர் எனப்படும் வியாழன் கோள் . 

Saturday, April 4, 2015

" சைனா பவுடர் " ஆபத்து .{தங்கத்தில் கலக்கப்படும் சைனா பவுடர்}.

                           " சைனா பவுடர் " ஆபத்து .
                         
                    தங்கத்தில் கலக்கப்படும் சைனா பவுடர் 

                       


                                               தங்க நகைகளில் செம்பிற்குப் பதிலாக தற்போது கலக்கப்படும் சைனா பவுடர் என்ற கலவையினால் பல நோய்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் இருப்பதாக வேதியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் .


                                                தங்க நகைகளில் இதுநாள் வரை செம்பு என்ற உலோகத்தை கலப்பார்கள் . இது உடலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்துவதில்லை . ஆனால் தற்போது சைனா பவுடர் ஒரு கலவை தங்கத்தில் சேர்க்கபடுகிறது .


                                                                                                                                 இரிடியம்

                                                     இந்த சைனா பவுடரில் இரிடியம் , ஸ்தேனியம் ஆகிய உலோகப் பொருட்கள் உள்ளன . இரிடியம் என்பது அரிய உலோகமாகும் .இது பிளாட்டினத்தின் இயல்புகளை கொண்டுள்ளது . ஆனால் பிளாட்டினத்தை விட விலை குறைவாக கிடைக்கிறது . இது பிளாட்டினத்தோடு சேர்ந்து கிடைக்கின்றது . இது மிக கடினமாக உள்ளது . வேதி வினைக்கு தடை அளிக்கின்றது . இது கதிரியக்கதன்மை உள்ளது .
                                                                                                                          ஸ்தேனியம்
                                               
                                                        ஸ்தேனியம் பவுடரிலும் கதிரியக்கதன்மை உள்ளது . இதனால் பல நோய்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் . சீனாவில் தயாரிக்கப்படும் இந்த பவுடர் இரகசியமாக கடத்திவரப்படுகின்றது . இதனை தங்க நகைகளில் சேர்க்கப்படும்போது உரைகல்லில் கண்டுபிடிக்க முடிவதில்லை . மேலும் கம்ப்யூட்டர் பருப்பாய்வு தொழில்நுட்ப முறையிலும் தங்கத்தில் சைனா பவுடர் கலக்கபட்டுள்ளதை கண்டறிய முடியாது . தங்க நகைகள் செய்யும்போது பரவலாக சைனா பவுடர் கலக்கபடுவதால் இதன் விலை அதிகரித்து கொண்டே செல்கின்றது . சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சைனா பவுடரின் விலை 500 மடங்கு உயர்ந்துள்ளது.


                                                        நகை உற்பத்தியாளர்கள் மத்தியில் பரவலாக இதன் உபயோகம் இருப்பதையே இந்த விலை உயர்வு காட்டுகின்றது . இந்த கலப்படம் கதிரியக்கத்தை கொண்டுள்ளதால் தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபாயத்தைக் கொண்டுள்ளது .


                                                         இந்த கலப்படத்தை சமாளிப்பது குறித்து மும்பையில் உயர்நிலை ஆய்வுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன . இந்திய அரசின் தரங்கள் துறை , மற்றும் ஹால் மார்க்கிங் துறை இந்த பிரச்னையில் அதிக கவனம் செலுத்துகின்றன . இந்தியாவில் தங்க நகைகள் வாங்கும் பழக்கமும் , சேமிக்கும் பழக்கமும் அதிகம் என்பதால் இந்திய இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது .


இந்த தகவல் தினமலர் செய்தித்தாளில் 3/AUGUST/2005 அன்று வெளியானது.

Monday, March 23, 2015

சைக்கிள்.


                                                             சைக்கிள்
                                                             
சைக்கிள் மிகச்சிறந்த , எளிமையான வாகனம் . சீனாவில் எல்லா நிறுவனங்களிலும் சைக்கிள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது . பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சைக்கிளை பயன்பாட்டிற்கு வழங்குகிறது .பெரிய நிறுவனங்களில் அதிகபட்சம் 2 ஆயிரம் சைக்கிள்களை நிறுத்தும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருக்கும் . உலகிலேயே சைக்கிளை அதிகமாக பயன்படுத்துவோர் சீனர்கள் தான் .